குழந்தைகள் என்றாலே எப்போதும் விசேடமானவர்களாகவே இருப்பார்கள்.
அவர்களின் செயற்பாடுகளும் ஏனைய பருவத்தினரை விடவும் வித்தியாசமாகவே இருக்கும்.
இப்படியிருக்கையில் தற்போது ஆய்வு ஒன்றின் ஊடாக குழந்தைகளின் மற்றுமொரு விசேட இயல்பினை கண்டறிந்துள்ளனர்.
அதாவது அனைத்துக் குழந்தைகளும் தாம் பிறந்த மொழியினை ஞாபகம் வைத்திருப்பதில் கில்லாடிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறித்த மொழியை தமது வாழ்நாளில் பாவிக்காது விடினும், இதுதான் தாம் பிறந்த மொழி என்பனை ஞாபகம் வைத்திருப்பார்கள் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தாம் குறித்த மொழியினைப் பயன்படுத்தாத போதிலும் வாழும் சூழலில் பேசப்படுவதினைக் கொண்டு இந்த ஆற்றலைப் பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை பிறந்த ஆறு மாத காலத்தினுள் தமது மொழி எது என்று தெரிந்துகொள்ளும் குழந்தைகள் அம் மொழியினை இலகுவாக கற்றுக்கொள்கின்றன எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சியானது நெதர்லாந்திலுள்ள Radboud பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.