கொழும்பு – கண்டி பிரதான பாதையில் பஸ்யால பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்தில், 37 பேர் படு காயமடைந்து வத்துபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பெண்ணொருவரும், ஆண்ணொருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மற்றும் நிட்டம்புவ திசையில் இருந்து பயணித்த பாரவூர்தியும் மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது பேருந்து குடை சாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த விபத்தினால், பாதையில் வாகன நெரிசல் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.