முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டிற்கு பணிப்பெண்களாக செல்லும் யுவதிகள் பலரை, ரிஷாத் பதியுதீனின் மைத்துனர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டயகமவை சேர்ந்த 22 வயது யுவதி பணிப்பெண்ணாக இருந்த போது, அவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ரிஷாத் பதியுதீனின் மனைவியின் சகோதரன் சியாப்தீன் இஸ்மதீன் (44) கைதாகியுள்ளார்.
தரகரான சங்கர் என அழைக்கப்படும் பொன்னையா பண்டாரத்தின் மூலம் கிஷாலினி உள்ளிட்ட மலையக யுவதிகள் ரிஷாத் பதியுதீனின் வீட்டிற்கு பணிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ரிஷாத் பதியுதீன் வீடு மற்றும் வேறு சில நெருங்கிய உறவினர்களின் வீடுகளில் அவர்கள் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர்.
ரிஷாத் பதியுதீன் வீட்டுக்கு பணிப்பெண்களாக அழைத்து வரப்பட்ட சிறுமியர், யுவதிகள் பலர், ரிஷாத் பதியுதீனின் மைத்துனரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டது தொடர்பான தகவல்கள் பொலிஸ் விசாரணைகளில் வெளியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, ரிஷாத் பதியுதீன் வீட்டு பணிப்பெண் ஒருவர் பம்பலப்பிட்டி பகுதியில் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்ததாக கூறப்பட்டது.
அந்த சம்பவம் தொடர்பாகவும் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ரிஷாத் வீட்டுக்குள் பணிப்பெண்களிற்கு நடந்த பயங்கர சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த 5 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவி ஆயிஷா அப்தீன் (46), அவரது தந்தை மொஹமட் சியாப்தீன் (70), மனைவியின் சகோதரர் சியாப்தீன் இஸ்மதீன் (44) மற்றும் புரோக்கர் பொன்னையா பாண்டரம் ஆகியோர் நாளை காலை 10 மணிக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள்.