ஆண்களை விட பெண்கள் தான் நீண்ட நாட்கள் உயிர் வாழ்கிறார்கள் என்பது பல்வேறு நாடுகளின் புள்ளி விவரங்களின் மூலம் நமக்கு தெரியும்.
ஆனால் இத்தகைய ஆயுட்கால வித்தியாசம் மனிதர்களிடம் மட்டுமில்லாமல் விலங்குகளிலும் காணப்படுகிறது.
எனவே இதுகுறித்து ஆராய்ச்சி செய்த போது, அதற்கு காரணம் பரிணாம வளர்ச்சியில் இருக்கும் ஒரு ஓட்டை தான் என்று அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகிறது.
பெண்கள் ஆண்களை விட நீண்ட நாட்கள் வாழ்வதற்கு காரணம் என்ன?
மனிதன் உள்ளிட்ட பல உயிரினங்களில் காணப்படும் ஆண்,பெண் ஆயுட்கால வித்தியாசத்திற்கு காரணமாக இருப்பது, உயிரணுக்களின் செயல்பாட்டுக்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் பகுதியான மைட்டோ காண்ட்ரியா ஆகும்.
உயிர்களின் மரபுத்தொகை டி.என். ஏ வில் மிர்ட்டேசன் எனும் பரிணாம செயல்பாடு, அடுத்த சந்ததிக்குச் செல்லாமல் தடுக்கிறது.
ஆனால் இது பெண்களுக்கு ஆபத்துக்களை ஏற்படுத்தாது. ஆண்களுக்கு மட்டும் ஆபத்து விளைவிக்கக் கூடிய மிர்ட்டேஷன்கள், மைட்டோகாண்ட்ரியாவில் ஏற்பட்டு, அவை அப்படியே அவர்களின் அடுத்த சந்ததிக்குச் செல்கிறது.
இந்த மிர்ட்டேஷன்கள், ஆண் மற்றும் பெண் குழந்தைகள் என இருபாலருக்கும் சென்றாலும், ஆண்களை மட்டுமே பாதிக்கக்கூடியதாக இருக்கிறது.
எனவே ஆண்களின் குறைவான ஆயுட்காலத்துக்கும் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ விலுள்ள மிர்ட்டேஷன் தான் காரணமாக உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றது