பிரான்சில் கொரோனா சுகாதார சான்றிதழ் திட்ட சட்டம் நாடாளுமன்றத்தின் மேல் அவையின் அங்கீகாரத்தை இன்றிரவு பெறக்கூடும் என எதிர்பார்க்கபடும் நிலையில் இந்த திட்டத்துக்கு எதிராக தொடர்ந்தும் மக்கள் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
நேற்று பரிஸ் நகர் உட்பட நாடளாவிய ரீதியில் ஊர்வலங்கள் நடத்தப்பட்ட போது சில இடங்களில் வன்முறைகள் ஏற்பட்டிருந்தன.
ஆயினும் ஒப்பீட்டு ரீதியில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற போராட்டங்களில் பங்கேற்ற மக்களை விட குறைவான மக்களே இந்த போராட்டங்களில் பங்கெடுத்திருந்தனர்.
இந்த நிலையில் கொரோனா சுகாதார சான்றிதழ் திட்ட சட்டம் தொடர்பாக பிரதிநிதிகள் மற்றும் செனட்டர்களின் கூட்டுக் குழு இன்று ஒரு உடன்பாட்டை எட்டினாலோ, இந்த திட்டம் அங்கீகரிக்கப்படும் நிலைமை இருந்தாலோ? கடும் வாதப் பிரிதிவிவாதங்கள் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.