தேசிய சுதந்திர முன்னணி தலைவர், விமல் வீரவன்ச கடந்த 10ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அன்று மாலை முதலே அவரது நலம் விசாரிக்கும் நோக்கில் அரசியல்வாதிகள், கலைஞர்கள், நிபுணர்கள் பலர் சென்றிருந்தனர்.
விமல் வீரவன்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாள் முதல் சிறைச்சாலைக்குள்ளேயே அவர் இருந்தார். அண்மையில் ஒரு நாள் வைத்திய பரிசோதனைக்காக அவர் அழைத்து செல்லப்பட்டு பரிசோதனைக்கு உட்பட்டுள்ளார்.
இதன் போது அவரது இரத்த அழுத்தம் அதிகரித்துள்ளமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு வைத்தியர்கள் விமலுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
எனினும் விமல் வீரவன்ச அதனை நிராகரித்துள்ள நிலையில் தனது நோய் நிலைமைக்கு சிகிச்சை மாத்திரம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதற்கமைய தற்போது மருந்து பெற்றுக் கொண்டு சிறைச்சாலை அறையினுள் காலத்தை கடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகயீனம் காரணமாக விமலை நலம் விசாரிக்க வரும் பலருக்கு அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
எப்படியிருப்பினும் நீண்ட காலங்களின் பின்னர் தனக்கு கிடைத்த இந்த ஓய்வு நேரத்தை மிகவும் பயனுள்ளதாக மாற்றியுள்ளார். வீரவன்ச தற்போது புத்தகம் ஒன்றை எழுதும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.