Loading...
அமெரிக்காவின் புதிய அதிபராகியிருக்கும் திரு டோனல்ட் டிரம்ப், திரு பராக் ஒபாமா, தமக்கு அழகிய கடிதமொன்றை வெள்ளை மாளிகையில் விட்டுச்சென்றிருப்பதாகக் கூறியுள்ளார்.
தமது நிர்வாகக் குழு உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்ச்சியில் திரு டிரம்ப், அந்தக் கடிதம் குறித்து பேசினார்.
முன்னாள் அதிபர் அலுவலகத்தில் விட்டுச் சென்ற அந்தக் கடிதத்தைத் திரு டிரம்ப் தமது சட்டைப் பையிலிருந்து எடுத்துக் காண்பித்தார்.
Loading...
அதைப் பத்திரமாக வைத்துக்கொள்ளப்போவதாகச் சொன்னார் திரு டிரம்ப்.
பதவி கைமாறும்போது முன்னாள் அதிபர், புதிய அதிபருக்குக் கடிதமொன்றை விட்டுச் செல்வது அமெரிக்கப் பாரம்பரியத்தில் நீண்ட காலமாக இடம்பெற்று வருகிறது.
Loading...