தமிழகத்தில் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பவர்களை பொலிசார் வலுக்கட்டாயமாகவும், தடியடி நடத்தியும் வெளியேற்றி வருகின்றனர்.
மெரீனாவில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் கடற்கரையில் இறங்கி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களுக்கு ஆதரவாக மீனவ கிராமங்களை சேர்ந்த மக்களும் ஒன்றுதிரண்டுள்ளனர்.
இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் பேசிய வீடியோவில், எனக்கு 6 மணிக்கு தான் விடயம் தெரியவந்தது.
உடனடியாக தொலைக்காட்சியை ஆன் செய்து பார்த்தேன், மெரீனாவுக்கு செல்லும் வழியை பொலிசார் அடைத்துள்ளனர்.
எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் என்னை விட மறுக்கிறார்கள், நீங்க யாரும் பயப்பட வேண்டாம்.
தயவுசெய்து தண்ணீருக்குள் யாரும் இறங்க வேண்டாம், நமது உயிர் நமக்கு முக்கியம், எப்படியாவது நான் அங்கு வந்துவிடுவேன் என தெரிவித்துள்ளார்.