திரிஷா இயற்கையாகவே தெரு நாய்கள் மீதும், பல வளர்ப்பு பிராணிகள் மீதும் மிகுந்த அக்கறை கொண்டவர்.
அதன் காரணமாகவே அனிமல் லவ்வர் என்று பலரும் இவரை அழைத்து வந்தனர்.
இதனால், இவர் பீட்டா என்கிற அமைப்பு பல விலங்குகளை காப்பாற்றுகிறது என நம்பி அதில் உறுப்பினராக இணைந்தார்.
இதன் காரணமாக ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழக இளைஞர்கள் இவரை ஒரு வழி செய்துவிட்டனர்.
இதை தொடர்ந்து தற்போது பல உண்மைகள் பீட்டாவை பற்றி வெளிவந்ததும் இவரே முன்வந்து ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தன் ஆதரவை தந்தார்.
தற்போது இவரை பீட்டா அமைப்பு மிக மோசமாக திட்டியுள்ளது, இதில் ‘ஒருபக்கம், நாய்களுக்கு ஏற்படும் கொடுமைகள் குறித்து பிரசாரம் செய்யும் த்ரிஷா இன்னொரு பக்கம் காளையை கொடுமை செய்யும் விளையாட்டை ஆதரிக்கின்றார்.
இது முரண்பாடாக உள்ளது, த்ரிஷா எங்கள் விளம்பர தூதரே கிடையாது’ என்று கூறி திரிஷாவை அவமான படுத்தி வெளியேற்றியுள்ளது பீட்டா அமைப்பு .