Loading...
பூநகரி, கௌதாரிமுனையில் கடலட்டைப் பண்ணைகளை அமைக்கும் பணிகள் பிரதேச கடற்றொழிலாளர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலுக்கு அமைய நக்டா நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட 16 இடங்களில் பண்ணைகளை அமைக்கும் பணிகள் முதற்கட்டமாக நேற்று (26) ஆரம்பிக்கப்பட்டன.
Loading...
இதற்கான பயனாளர்கள் கௌதாரிமுனை கடற்றொழிலாளர் சங்கத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் பண்ணைகளை அமைப்பதற்கு தேவையான வலைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு தொகுதி வலைகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.
Loading...