பன்னெடுங்காலமான முன்னெடுக்கப்பட்டு வந்த ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை தடுத்து நிறுத்த முயல்வது, சமூக சிக்கல்களை தோற்றுவிக்குமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற உழவர் விழாவில் விசேட அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய வடக்கு முதல்வர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டிகள் இந்தியாவில் பன்னெடுங்காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த போதும் கடந்த ஒரு சில ஆண்டுகளாக இப் போட்டிகளை அரசு தடுத்து நிறுத்த முயல்வதும் அதற்கு எதிராக பல அணிகள் போர்க்கொடி தூக்குவதும் தமிழ்நாட்டில் இடம்பெற்றுவரும் ஒரு துர்ப்பாக்கிய நிகழ்வாகுமென குறிப்பிட்டுள்ள முதல்வர் விக்னேஸ்வரன், இப்பிரச்சனையை இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகள் பொறுமையுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் அணுகி உரிய தீர்வைப் பெற முயற்சிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.