நடிகர் | யுரேகா |
நடிகை | சாண்ட்ரா |
இயக்குனர் | யுரேகா |
இசை | அனீஷ் யுவாணி,சிவா சரவணன் |
ஓளிப்பதிவு | மகேஸ்வரன் |
இதற்காக சிகப்பு விளக்கு பகுதிக்கு செல்லும் யுரேகா, அங்கு வாழும் பெண்ணாண சாண்ட்ராவிடம், அவரது வாழ்க்கை குறித்து பல விஷயங்களை கேட்கிறார். குறிப்பாக சிவப்பு விளக்கு பகுதியில் சாண்ட்ரா சந்தித்த வித்தியாசமான மற்றும் மாறுபட்ட மனிதர்கள் பற்றியும் அவர்களால் சாண்ட்ரா அனுபவித்த கஷ்டங்கள் குறித்தும் கேட்கிறார்.
இதில் தனது வாழ்க்கையில், மறக்க முடியாததாக 5 மனிதர்கள் பற்றி சாண்ட்ரா விவரிக்கிறார். ஒரு இளைஞர், டாக்டர், சாமியார், திருநங்கை, தீவிரவாதி உள்ளிட்ட 5 பேரால் தான் அனுபவித்த கொடுமைகளை விவரிக்கும் சாண்ட்ரா, காவல் அதிகாரியின் மாமூல் தொல்லை குறித்தும் கவலை தெரிவிக்கிறார்.
சென்னையில் தினமும் பல்வேறு வகையான வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. குறிப்பாக பாலியல் தொல்லை, கள்ளத்தொடர்பு,
விபசாரம், கற்பழிப்பு உள்ளிட்ட வழக்குகளே அதிகளவில் பதியப்படுகிறது. இதற்கு தீர்வு காண சென்னையில் சிகப்பு விளக்கு பகுதியை உருவாக்க வேண்டும் என்று நினைக்கும் யுரேகா, அவ்வாறு சிகப்பு விளக்கு பகுதியை உருவாக்குவதன் மூலம் குற்றங்கள் குறையும் என்றும் நம்புகிறார்.
இந்தியாவில் மும்பை உட்பட ஒரு சில மாநிலங்களில் சிவப்பு விளக்கு பகுதிகள் உள்ளன. அதேபோல் சென்னையில் சிவப்பு விளக்கு பகுதியை அமைக்க வேண்டும் என்று நினைக்கிறார் யுரோகா.
தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து இளைஞர்கள், பெரியவர்கள் என பலர் கல்வி, வேலைவாய்ப்புக்காக சென்னைக்கு வருகின்றனர். அவர்கள் உணர்ச்சி மிகுதியால் செய்யும் தொல்லையால், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதனை தடுக்க சிவப்பு விளக்கு பகுதியை சென்னையில் உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்யும் யுரோகா, இதன்மூலம் ரவுடி, தொழிலதிபர்கள் மூலம் தொல்லைக்குள்ளாகும் விலைமாதுக்களுக்கும் தீர்வு கிடைக்கும் என்றும் நம்புவது சிறப்பு.
படத்தில் யுரேகா, சாண்ட்ரா எமியை தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் புதுமுகங்கள் என்றாலும், அனைவரும் அவர்களது கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். தணிக்கைக்குழுவில் ஏ சான்றிதழ் பெற்றாலும்,இப்படம் காமம், கவர்ச்சி, பாலியல் உள்ளிட்ட காட்சிகளின்றி அமைந்துள்ளது.
எழுத்தாளராக நடித்துள்ள யுரேகா அவரது கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ளார். எழுத்தாளருக்கு தேவையான கேள்விகளுடனும், கிண்டலுடனும் படத்தில் வலம் வருகிறார்.
அதே போல் சிவப்பு விளக்கு பகுதியில் வரும் பெண்ணாக நடித்துள்ள சாண்ட்ராவும் படம் முழுவதும் கவர்ச்சி, காமம் இன்றி திரையில்
வலம்வருகிறார்.
மேலும், படம் முழுவதும் கவர்ச்சி, காமம், பாலியல் போன்ற காட்சிகள் இல்லாமல் சிறப்பான திரைக்கதையை அமைத்திருப்பது யுரேகாவின் நேர்த்தியான இயக்கத்தை காட்டுகிறது. பாலியல் சம்பந்தமான எந்தவித காட்சிகளின்றியும் யுரேகா படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் சிவப்பு எனக்கு பிடிக்கும் சிவப்பு பகுதி வேண்டி சிவப்பு இல்லாமல் எடுக்கப்பட்ட புதுமையான கதை.