மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் மீரிகம, குருநாகல் பகுதி நிரமாணப் பணிகளுக்கான காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெறுவதாக திட்டப் பணிப்பானர் வி.மொஹான் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய குறித்த பகுதியின் நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நிர்மாணப் பணிகளுக்கு தேசிய ஒப்பந்தக்காரர்கள் பொறுப்பாகச் செயற்படுவார்கள்.
இவர்களுக்கு ஆரம்ப கட்டமாக கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெறுவதற்காக அடுத்த வாரத்தில் ஆவணம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன் நிர்மாணப் பணிகளில் 30 சதவீதமானவை இந்த வருடத்திலும், 40 சதவீதமானவை அடுத்த வருடத்திலும் பூர்த்தி செய்யப்பட உள்ளது.
137 பில்லியன் ரூபா இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உலக வங்கியின் நிதியுதவியுடன் 2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் நிர்மாணப் பணிகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட உள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.