ஜல்லிக்கட்டு வேண்டும் என்று கோரி கடந்த 6 நாட்களாக இரவு பகல் பாராமல் மாணவர்கள், மாணவிகள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவசரச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தாலும் நிரந்தர சட்டம் தேவை என்று கோரி மாணவர்களும், இளைஞர்களும் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மாணவி ஒருவர் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவையும், முதல்வரையும் எதிர்த்து கோஷம் எழுப்பினார். இவர் கொலை கொடூரமாக கொலைசெய்யப்பட்டுவிட்டார் என்ற வதந்தி தற்போது தீயாய் பரவி வருகிறது.
ஆனால் கொலை செய்யப்பட்டதாக கருதப்படும் மாணவி இவர் இல்லை என்பதை தெளிவாக விளக்கியுள்ளது இந்த ஆதாரம். இறந்த பெண் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு அளிக்க வந்தவர் என்பதும் இவர் சென்னை ஆவடியில் ஓடும் ரயிலிலிருந்து தவறிவிழுந்து மரணடைந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. எது எப்படியோ?… ஜல்லிக்கட்டுக்கு என்று ஒரு உயிர் போய்விட்டது பரிதாபத்திற்காக விடயமாகும்.