முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் மறுபடியும் பேச்சுவார்ததை நடத்துவது குறித்து மீண்டுமொருமுறை சிந்திக்க வேண்டும் என தென் மாகாண முதலமைச்சர் ஸான் விஜேலால் சில்வா தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பின்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,
மஹிந்த ராஜக்ஸவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றுதான் நாம் எதிர்பார்த்து சென்றோம். ஆனால், அவர் வேறு தரப்பினரையும் அழைத்திருந்தார்.
அவர்களை அங்கு அழைத்தமைக்கான காரணம் என்ன என்று எனக்குத் தெரியாது.
நூற்றுக்கு நூறு வீதம் சாதகமான பிரதிபலன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் நாம் செல்லவில்லை.
இருப்பினும், பாதகமாக சிந்திப்பவர்களும் அல்ல. இரண்டுக்கும் இடைப்பட்ட நிலைப்பாட்டுடனேயே சென்றோம்.
பொது எதிர்க்கட்சியுடன் நடத்திய பேச்சுவார்த்தை முழுமையாக தோல்வியடைந்தது.
அதனால், இரண்டாவது சுற்று பேச்சுவார்ததைக்கு செல்வதா என்பது தொடர்பில் தான் மீண்டும் ஒருமுறை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என தென் மாகாண முதலமைச்சர் ஸான் விஜேலால் சில்வா கூறியுள்ளார்.