மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர்கள் முரல் மீன் பிடியில் ஈடுபடுவதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முரல் மீனபிடியில் ஈடுபடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை காரணமாக, குறித்த தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட ஆயிரக்கணக்கான கடற்றொழிலாளர்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டனர்.
கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டில் பல்வேறு பொருளாதார சவால்கள் காணப்படுகின்றன.
இவ்வாறான நிலையில் மேலும் பாதிப்புக்களை உருவாக்கும் வகையில் மீன்பிடித் தடைகள் அமையக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு, முரல் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதியை மட்டக்களப்பு கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.