Loading...
இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்று தொடர்பில் பிரபல சிங்கள பாடகி உமாரியா சிங்ஹவங்ச வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் பாடகி உமாரியா சிங்ஹவங்ச பயணித்த காரும், முச்சக்கர வண்டி ஒன்றும் மோதுண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
சம்பவத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Loading...