கடந்த மார்ச் மாதத்தில் 1100 மில்லியன் வியூஸ்களைப் பெற்ற ரவுடி பேபி பாடல், தற்போது 12000 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான படம் “மாரி 2”. இதில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான “ரவுடி பேபி” பாடல் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது. படம் பெரிய அளவில் ஹிட்டாகவிட்டாலும், ‘ரவுடி பேபி’ பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்களை கவர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
இந்த பாடல் யூ-டியூப்பில் வெளியாகி இரண்டரை ஆண்டுகளை கடந்த போதும், ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் 1100 மில்லியன் வியூஸ்களைப் பெற்ற ரவுடி பேபி பாடல், தற்போது 12000 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. கடந்த 5 மாதத்தில் மட்டும் தினமும் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த பாடலை யூ-டியூப்பில் கண்டு ரசித்து, இப்படியொரு சாதனை படைக்கவைத்துள்ளனர்.