முடி வளர்ச்சிக்கு எத்தனையோ எண்ணெய்களை போட்டு, எவ்வளவோ ட்ரீட்மெண்ட் எடுத்தும் இருப்போம் ஆனாலும் பலனளிக்காத தருணத்தில், இயற்கையான முறையில் உங்களது உணவு பழக்கவழக்கத்தை வைத்தே, வெறும் ஏழு நாட்களில், புது முடிகளை வளர வைப்பதற்கான பொருட்களை பற்றி தான் தெரிந்துகொள்ளபோகின்றோம்..
பொதுவாகவே புரோட்டீன் பற்றாக்குறை, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, சத்துக்கள் தேவையான அளவு உடலில் இல்லை என்றால் முடியின் வளர்ச்சி தடைபடுகிறது. இந்த சத்துக்களை எல்லாம் நம்முடைய உடலுக்கு சீராக தரக்கூடிய பொருட்களை தினம் தோறும் நாம் சாப்பிட்டு வரவேண்டும்.
முதலில் காலை எழுந்தவுடன் பல் தேய்த்துவிட்டு 1 டம்ளர் அளவு தண்ணீரைக் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கும், முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. டீ காபிக்கு பதிலாக சத்துமாவு கஞ்சியைக் குடிக்கலாம்.
காலை இட்லி தோசைக்கு பதிலாக கம்பு மாவு, கேழ்வரகு மாவு, வரகு, தினை இப்படிப்பட்ட சிறு தானியங்கள் சேர்க்கப்பட்ட உணவை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. கட்டாயமாக இதனுடன் சைட் டிஷ் ஆக, கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா சேர்த்த சட்னி வகைகளை சாப்பிடுவது மேலும் நன்மையை கொடுக்கும்.
மதியம் சாப்பாடு சாப்பிட்டாலும் அதனுடன் ஒரு கீரை வகை அவசியம் தேவை. குறிப்பாக முருங்கைக் கீரை, பசலைக்கீரை, முளைக்கீரை, பசலைக்கீரை, இந்த கீரை வகைகளை வாரத்தில் ஒரு முறையாவது கட்டாயம் சாப்பிட வேண்டும்.
மேலும், மாலை நேரத்தில் கட்டாயம் ஏதாவது ஒரு சுண்டல் அவசியம் சாப்பிட வேண்டும். கொண்டைக் கடலை, பச்சைப் பயறு, மொச்சை, கொள்ளு, காராமணி இப்படி எந்த சுண்டலை சாப்பிட்டாலும் சரி தான்.
இப்படியாக உங்களுடைய உணவு பழக்கவழக்கத்தை ஆரோக்கியமானதாக மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம்.