சுவீடன் நாட்டில் இளம்பெண் ஒருவரை 3 பேர் அடங்கிய கும்பல் ஒன்று கொடூரமாக கற்பழித்து அதனை பேஸ்புக்கில் நேரலையாக வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவீடனில் உள்ள Uppsala என்ற நகரில் தான் இந்த கொடூரச் செயல் நிகழ்ந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு அன்று பொலிசாருக்கு வாலிபர் ஒருவர் பரபரப்பு தகவல் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், ‘இளம்பெண் ஒருவரை மூன்று பேர் அடங்கிய கும்பல் ஒன்று கற்பழித்ததாகவும், அதனை பேஸ்புக்கில் உள்ள நேரலை வீடியோவில் பதிவிட்டு தனது நண்பர்களுக்கு அவர்கள் காட்டியுள்ளதாகவும் அந்த வாலிபர் புகார் அளித்துள்ளார்.
புகாரை பெற்ற பொலிசார் பேஸ்புக் தளத்தில் சோதனை செய்தபோது, நண்பர்கள் மட்டும் இணைந்துள்ளது பேஸ்புக் குரூப்பில் அந்த கொடூரமான வீடியோ பகிரப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், நகரின் மையத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
தகவல்களை சேகரித்த பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தி இந்த கற்பழிப்பு தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர்.
எனினும், கற்பழிப்பிற்கும் இம்மூவருக்கும் தொடர்புள்ளதா என பொலிசார் தகவல் எதுவும் வெளியிடவில்லை.
இளம்பெண் கற்பழிப்பு தொடர்பாக ஆதாரங்களை சேகரித்து வரும் பொலிசார் கைது செய்யப்பட்டுள்ள மூவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.