Loading...
வீதியில் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த முதியவர் திடீரென தடுமாறி வீதியோரம் வீழ்ந்த நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
அவருக்கு கொரோனா தொற்று உள்ளது என பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுதுமலை மற்றும் உரும்பிராயை வதிவிடமாகக் கொண்ட 63 வயதுடையவரே இவ்வாறு இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
Loading...
யாழ்ப்பாணம் சிவலிங்கப் புலியடியச் சந்தியில் பயணித்த போது, அவர் திடீரென வீதியில் உந்துருளியில் இருந்து சரிந்து வீதியோரத்தில் வீழ்ந்துள்ளார். இதனை அடுத்து அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...