இங்கிலாந்தில் நடைபெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியில் பெண் எலும்புக்கூட்டுடன் ஒரு நீல நிற போத்தல் கிடைத்த சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் கிங்ஸ்டன் அப்பான் ஹல் நகரில் தொல்பொருள் ஆராய்ச்சி நடைபெற்றது. 70 நிபுணர்களைக் கொண்ட இந்த குழு நிலத்தை தோண்டும் போது ஒரு எலும்புக்கூடு வெளிப்பட்டது.
அதைக் கண்டதும் ஆராய்ச்சியாளர்கள் திடுக்கிட்டனர். அந்த எலும்புக்கூட்டுடன் சேர்த்து நீல நிற போத்தலும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஆய்வு செய்த பொழுது அந்த எலும்புக்கூடு ஒரு பெண்ணுடையது என்றும் 60 வயதில் இறந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டது.
அந்த நீல நிற போத்தலை பரிசோதனை செய்யும் பொழுது அதில் பொட்டாசியம், சோடியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை இருப்பது தெரியவந்தது. அந்த திரவம் சிறுநீராக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த அகழ்வாராய்ச்சி திட்டத்தில் கிட்டத்தட்ட 1500 எலும்புக்கூடுகள் வெளியேற்றப்படும் என்று கருதப்படுகிறது. ஆராய்ச்சியில் வளையங்கள், மோதிரம், நாணயங்கள், உடைகள் போன்ற கலைப்பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன.
ஆனால் நீல பாட்டிலில் பிரவுன் திரவம் என்பது ஆய்வாளர்களுக்கே இன்னும் விசித்திரமாக உள்ளது.