கிரிஸ் நாட்டில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து மீண்டும் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பல நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. இதையடுத்து கொரோனாவின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருவதால் ஊரடங்கிற்கு தளர்வுகள் விடப்படுகிறது.
இந்நிலையில் கிரிஸ் நாட்டிலும் கொரோனா தொற்று காரணமாக பொருளாதாரம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. இதனை மீண்டும் சரிக்கட்ட சுற்றுலா தலங்களை திறக்க அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து கிரேக்க தீவான அலோனிசோஸின் கரையோரத்தில் ஏஜியன் கடலில் நீருக்கடியில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தை கிரீஸ் நாடு மீண்டும் திறந்துள்ளது.
கடலில் நீருக்கடியில் அமைந்திருக்கும் இந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் சுமார் 2,500 ஆண்டு பழமைவாய்ந்த மதுப்பானைகள், 5ஆம் நூற்றாண்டில் ஒரு பண்டைய கப்பல் விபத்துக்குள்ளான இடத்தை குறிக்கிறது.
ஒரு முறைக்கு சுமார் 110 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும். இதுவரை சுமார் 300க்கும் மேற்பட்ட ஸ்கூபா டைவர்ஸ் கடலுக்கடியில் இருக்கும் இந்த அருங்காட்சியகத்திற்கு சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.