தாம்பத்திய வாழ்க்கை மன நிறைவு மட்டுமின்றி முழு உடல் ஆரோக்கியத்துக்கும் வழி வகுக்கிறது. உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் ஃபிட்னெஸ்ஸை போல தாம்பத்தியமும் உடலுக்கு வலு சேர்க்கிறது.
மேலும், குழந்தைப் பேறு, தாம்பத்திய மகிழ்ச்சியைத் தவிர்த்து ஒரு மனிதனின் உடல், மன, உணர்ச்சி, சமூக நலன்களையும் செக்ஸ் காக்கிறது. அதுமட்டுமின்றி ஆபாச இணையதளங்கள் பயன்பாடு அதிகரிப்பது, சுய இன்பம் போன்ற காரணங்களால் கணவன் – மனைவி இடையேயான தாம்பத்தியம் பாதிக்கப்பட்டு வருகிறது.
பின்னர் அடிக்கடி தாம்பத்தியம் மேற்கொள்வது நல்லது இல்லை என்ற கருத்தும் மக்கள் மத்தியில் உள்ளது. தினமும் செய்தால் கூட எந்த பாதிப்பும் இல்லை என்று கூறுகின்றனர் செக்ஸ் மருத்துவர்கள். உறவில் ஈடுபடும்போது இதயத் துடிப்பு வேகமாகிறது. உடல் முழுவதும் ரத்த ஓட்டம் வேகமாக பாய்கிறது. அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுகின்றன.
இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறது. இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்க்கான வாய்ப்பு குறைகிறது. தினமும் தாம்பத்தியம் வைத்துக்கொள்வதன் மூலம் வாழ்க்கைத் துணைவரை மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள்.
வாழ்க்கைத் துணைவரின் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்கின்றீர்கள். இதனால் செக்ஸ் வாழ்க்கையின் சுவாரஸ்யம் அதிகரிக்கிறது. தினமும் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வதன் மூலம் மகிழ்ச்சிதரும் ஹார்மோன்கள் அளவு அதிகரிக்கிறது. குறிப்பாக மகிழ்ச்சிக்குக் காரணமாக ஆக்சிடோசின், எண்டார்பின் போன்றவை அதிகரிக்கிறது.
இதனால் மனம் நிறைவு அடைகிறது. தூக்கம் வருகிறது. நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைப்பதன் மூலம் வாழும் காலம் அதிகரிக்கிறது, நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமை அடைகிறது, நாள் முழுவதும் புத்துணர்வு, ஆற்றல் இருக்கும்.
தாம்பத்திய உறவு வைப்பதால் எண்டார்ஃபின் போன்ற மன மகிழ்ச்சி தரும் ஹார்மோன்கள் அளவு அதிகரிக்கிறது. இவை கார்டிசோல் போன்ற ஸ்டிரஸ் ஹார்மோன்களின் அளவைக் குறைக்கிறது. இதனால் மன அழுத்தம் குறைந்து, மன அழுத்தத்தால் வரக்கூடிய பல்வேறு உடல் நல பாதிப்புகளுக்கான வாய்ப்பு குறைகிறது.
மேலும், மன அழுத்தம் குறைவதால் உயர் ரத்த அழுத்தம் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. தொடர்ந்து ஸ்டிரஸ் ஹார்மோன் சுரப்பு குறைவதால் உயர் ரத்த அழுத்தம் முதல் பல்வேறு பாதிப்புகளுக்கான வாய்ப்பு குறைகிறது. சருமத்துக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதுடன், சருமத்தில் தேங்கிய நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு சருமம் பொலிவடையும்.