பெற்றோர்களின் பேச்சை கேட்காமல் வாங்கிய செல்போன் திடீரென தொலைந்து போனதால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை தெற்குவெளி வீதி முத்துகருப்பன் சந்து பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன்(31). இவர் சமீபத்தில் தனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி விலையுயர்ந்த புது செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார்.
இந்நிலையில் பார்த்திபன் வேலை தேடி திருவனந்தபுரம் சென்றபோது அவரது செல்போன் காணாமல் போயுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த பார்த்திபன், மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
செல்போன் காணாமல் போன விரக்தியில் இருந்த அவர், சம்பவத்தன்று இரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.