மருத்துவர் ஒருவரின் வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள் அவர்களைக் கட்டிப்போட்டு நகை பணத்தினை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவின் லோனாவ்லாவில் உள்ள பிரதான் பூங்காவில் குழந்தை மருத்துவராக இருக்கும் ஹீராலால் கண்டேல்வால்(73).
தனது முதிர் வயது மனைவியுடன் வாழ்ந்து வந்த இவரது வீட்டில் பணம் மற்றும் நகை இருப்பதாக அப்பகுதியில் தகவல் பரவியுள்ளது.
இந்நிலையில் முதியவர் வீட்டினை கொள்ளையடிக்க மத்திய பிரதேசம் சாகர் மாவட்டத்தில் வசிக்கும் சில கொள்ளையர்கள் வந்துள்ளனர்.
இவர்கள் மீது ஏற்கனவே கோவா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் மாநிலங்களில் பல கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
15 பேர் கொண்ட இந்த கொள்ளை கும்பல் மருத்துவர் வீட்டினுள் நுழைந்து, கை மற்றும் கால்களைக் கட்டிப் போட்டு, பின்பு மிரட்டி பீரோ சாவியை வாங்கிக்கொண்டு சுமார் 67 லட்சம் மதிப்புள்ள பணம், நகையினை எடுத்துக்கொண்டு எஸ்கேப் ஆகியுள்ளனர்.
பின்பு வழக்கு பதிவு செய்த பொலிசாரின் விசாரணையின் போது, கொள்ளையர்கள் 15 பேர் சிக்கயதோடு, ரூ. 30.52 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் நகையினை மீட்டுள்ளனர்.