இன்றைய காலகட்டத்தில் முடி உதிர்வது மிக பெரிய பிரச்சினையாக இருக்கிறது. முடி உதிர்வதைத் தடுக்க இயற்கையான வைத்தியம் மற்றும் சிகிச்சைகள் பல உள்ளன.
அவற்றில் முடி கொட்டுவதை தடுக்கும் வேப்ப எண்ணெய் எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
ஆரோக்கியமான முடி வளர்ச்சி பொடுகு குறைய தலையில் பேன் போக்க, நரை முடி தடுப்பதற்கு வேப்ப எண்ணெய் பயன்படுகின்றது.
தேவையான பொருட்கள்:
வேப்ப இலை – 1 கப்
செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் – 200 கிராம்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் நீரை பிடித்து அதில் வேப்ப இலைகளை நன்றாக கழுவவேண்டும். பிறகு வேப்ப இலைகளை மிக்ஸியியில் நன்றாக அரைத்து கொள்ளவும்.
அடுப்பில் எண்ணெயை நன்றாக காயவைத்து அதில் அரைத்த வேப்ப இலையை போட்டு எண்ணெய் பச்சை நிறமாக மாறிய பின் எண்ணெய்யை வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
15 நாட்கள் வரை இந்த எண்ணெயை வைத்து உபயோகிக்கலாம் .இந்த எண்ணெயை வாரத்தில் 2 முறை தேய்த்து, 1 மணி நேரம் ஊறவைத்து பின்பு மிதமான வெந்நீரில் குளிக்க வேண்டும்.முடி உதிர்வது நின்று விடும்.