இன்று காலை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தனது பிறந்தநாள் தினத்தை கேக் வெட்டி கொண்டாடினார்.
எனினும் இவரின் பிறந்தநாள் விழாவில் மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ள வில்லை. திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைப்பாடு காரணமாகவே மகிந்த குறித்த பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ளவில்லை.
மகிந்தவிற்கு பாரதூரமான நோய் எதுவும் இல்லை எனவும் அவருக்கு தொடர்ச்சியான ஓய்வு தேவைப்படுவதாகவும் மகிந்த குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இன்றைய தினம் ஷிரந்தி பிறந்தநாள் கேக்கினை வாழ்த்துப் பாடல் பாடி முடியும் முன்னர் வெட்டுவதற்கு அவசரப்பட்டுள்ளார்.
இதனால் அவரை தடுத்த நாமல் பொறுமையாக இருக்கும் படி கூறி வாழ்த்துப் பாடல் முடிந்தவுடன் கேக்கினை வெட்டுமாறு பணித்துள்ளார்.
மகிந்தவின் உடல் நலக் குறைப்பாடே ஷிரந்தி மற்றும் நாமல் போன்றோரின் இந்த பதற்ற நிலைக்கு காரணம் எனவும் கூறப்படுகின்றது.
பாலர் பாடசாலை சிறார்கள் உட்பட பலர் இந்த பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.