12ம் வகுப்புக்கான தமிழ் புத்தகத்தில் உ.வே.சாமிநாத அய்யர் பெயர் உ.வே.சாமிநாதர் என மாற்றப்பட்டுள்ளது.
தமிழக அரசின் புதிய பாட புத்தகங்களில் தமிழறிஞர்களின் சாதி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சியமைந்துள்ள நிலையில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தமிழக பாடநூல்களில் தமிழறிஞர்களின் பெயரின் பின்னால் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
12ம் வகுப்புக்கான தமிழ் புத்தகத்தில் உ.வே.சாமிநாத அய்யர் பெயர் உ.வே.சாமிநாதர் என மாற்றப்பட்டுள்ளது.
உ.வே.சா. ஆசிரியரான மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பது மீனாட்சி சுந்தரனார் என மாற்றப்பட்டுள்ளது.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை என்பது ராமலிங்கம் என மாற்றப்பட்டுள்ளது.
மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்பது வேதநாயகம் என மாற்றப்பட்டுள்ளது.
அதுபோல அனைத்து தமிழறிஞர்களின் சாதி பெயர்களும் நீக்கியே புத்தகம் இனி வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.