கடந்த வாரம் தமிழ் சினிமாவில் தமிழ்நாட்டுக்காக எழுந்த சில பிரச்சனைகளால் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதற்கு முன் வாரம் பொங்கல் ஸ்பெஷலாக விஜய்யின் பைரவா படம் வெளியாகி இருந்தது.
தற்போது இப்படத்தின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை பார்ப்போம். பைரவா இரண்டு வார முடிவில் ரூ. 5 கோடி வரை வசூலித்திருக்கிறது.
ஷாந்தனு நடித்திருக்கும் கோடிட்ட இடங்களை நிரப்புக ரூ. 27 லட்சமும், துருவங்கள் பதினாறு ரூ. 1 கோடியும் வசூலித்திருக்கிறது.
தெலுங்கு படங்களான சிரஞ்சீவியின் கைதி No150 ரூ. 46 லட்சமும், பாலகிருஷ்ணாவின் கௌதமிபுத்ர சதகர்ணி ரூ. 21 லட்சமும் வசூலித்திருக்கிறது.
பாலிவுட் படங்களில் Ok Jaanu ரூ 15 லட்சமும், அமீர்கானின் தங்கல் ரூ. 4 கோடியும் வசூலித்திருக்கிறது.
ஹாலிவுட் படமான தீபிகா படுகோனே, வின் டீசல் நடித்திருக்கும் XXX : THE RETURN OF XANDER CAGE படம் ரூ. 43 லட்சம் வசூலித்திருக்கிறது.