இத்தாலியில் கடுமையான பனிச்சரிவில் புதையுண்ட ஹொட்டலில் சிக்கிய இத்தாலிய இளைஞர் ஒருவர் தமது காதலியின் கரம் பற்றிக்கொண்டே உயிர் விட்ட சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியரான ஸ்டெஃபானோ சம்பவத்தன்று குறித்த ஹொட்டலில் தமது காதலியுடன் தங்கியிருந்துள்ளார்.
அப்பகுதியில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவை அடுத்து குறித்த ஹொட்டலும் பூமியில் புதைந்துள்ளது. இதில் அந்த ஹொட்டலில் அப்போது தங்கியிருந்த 30 பேர் இடிபாடுகளில் சிக்கினர். அதில் 8 பேர் மீட்பு குழுவினரால் பத்திரமாக மீட்கபட்டனர்.
மீட்கப்பட்டவர்களில் ஸ்டெஃபானோவும் ஒருவர். 28 வயதான ஸ்டெஃபானோவுக்கு விபத்தின் போது தூண் ஒன்று இவர் மீது சரிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் குற்றுயிரான அவரை மீட்டு இடிபாடுகளில் இருந்து வெளியே எடுத்துள்ளனர். ஆனால் சுயநினைவை இழந்த நிலையில் ஸ்டெஃபானோ தற்போது உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.
காதலியின் அருகாமையிலேயே காதலன் உயிரழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பன்னிச்சரிவு சம்பவத்தில் புதையுண்ட ஹொட்டலில் இருந்து இதுவரை 6 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். மேலும் 23 பேர் மாயமானதாக கூறப்படுகிறது.
மாயமானவர்கள் பெரும்பாலும் உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. இதனிடையே புதையுண்ட ஹொட்டல் அறையில் இருந்து உயிருடன் 3 நாய் குட்டிகளை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.