யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 135 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் யாழ் மாவட்டத்தில் மட்டும் 77பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக நாடு முழுவதும் சிறார்கள்கள் அதிகளவாக தொற்றிற்குள்ளாகி வரும் நிலையில், வடக்கு பரிசோதனைகளிலும் சிறார்கள் அதிகளவில் தொற்றிற்குள்ளாகி வருகின்றனர்.
நேற்று (11) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 416 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
யாழ் மாவட்டத்தில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 29 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் உரும்பிராயை சேர்ந்த தாய், இரண்டு மகள்கள், 15 வயதான மகன் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.
மானிப்பாய் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 10 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதில் 17 வயதான மாணவன் ஒருவரும் உள்ளடங்குகிறார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உறுதியானது.
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரிற்கு தொற்று உறுதியானது. இதில் தாயாரும், 2 வயதான மகனும், 16 வயதான பிறிதொரு சிறுவனும் உள்ளடங்குகிறார்கள்.
கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேருக்கு தொற்று உறுதியானது.
சங்கானை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 2 பேருக்கு தொற்று உறுதியானது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 6 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் 3 பேர் பருத்தித்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள்.
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் 8, 16 வயதான சிறுவர்கள், 6 வயது சிறுமி மற்றும்18, 12, 7 வயதுடைய ஒரே குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகளும் தொற்றிற்குள்ளாகினர். யாழ் மாவட்டத்தில் 77 பேருக்கு தொற்று உறுதியானது.
வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேரும், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேரும், நெடுங்கேணி மாவட்ட வைத்தியசாலையில் 2 பேரும், செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் 13 பேரும், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 7 பேருமாக 32 பேருக்கு தொற்று உறுதியானது.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 4 பேரும், உருத்திரபுரம் மாவட்ட வைத்தியசாலையில் 2 பேரும், அக்கராயன்குளம் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவரும் என 7 பேருக்கு தொற்று உறுதியானது.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 5 பேருக்கு தொற்று உறுதியானது.
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 13 பேருக்கு தொற்று உறுதியானது.
காங்கேசன்துறை கடற்படை தளத்தில் ஒருவருக்கு தொற்று உறுதியானது.