இங்கிலாந்து நாட்டில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. அங்கு 8 கோடியே 67 லட்சத்து 80 ஆயிரத்து 455 பேருக்கு தடுப்பூசி போடபட்டுள்ளது. இவர்களில் 4 கோடியே 70 லட்சத்து 91 ஆயிரத்து 899 பேர் முதல் ‘டோஸ்’ செலுத்திக்கொண்டுள்ளனர்.
2 ‘டோஸ்’களையும் செலுத்திக்கொண்டோர் எண்ணிக்கை 3 கோடியே 96 லட்சத்து 88 ஆயிரத்து 566 ஆகும். இது 75 சதவீத மக்கள் தொகை ஆகும். ஆக, அந்த நாட்டில் 4-ல் 3 பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டு விட்டனர்.
இதன்மூலம் அங்கு 2 கோடியே 20 லட்சம் பேர் தொற்று பரவலில் இருந்தும், 66 ஆயிரத்து 900 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவதில் இருந்தும், 60 ஆயிரம் பேர் வரையில் மரணத்தில் இருந்தும் தடுக்கப்பட்டுள்ளனர் என அந்த நாட்டின் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.