டெல்டா வைரஸின் தாக்கத்தை, இனிவரும் காலத்திலேயே எதிர்பார்க்க முடியும் என ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக வைத்திய பீடத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார்.
நாட்டில் டெல்டா வைரஸ் பரவலின் ஆரம்பகட்டத்திலேயே, இலங்கை தற்போது உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வைரஸ் நாடொன்றில் பரவ ஆரம்பித்து, 6 வாரங்களிலேயே அதன் தாக்கத்தை அவதானிக்க முடியும் என கூறிய அவர், தற்போது இலங்கை 6 ஆவது வாரத்தை அண்மித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இனிவரும் காலங்கள் மிக தீர்மானம் மிக்கது என அவர் கூறுகின்றார். முகக் கவசத்தை அப்புறப்படுத்தி, 5 நொடிகளில் இந்த வைரஸ் ஒருவருக்குள் செல்லும் இயலுமை கொண்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உணவின்றி உயிரிழப்பதா? அல்லது ஒக்சிஜன் இன்றி உயிரிழப்பதா? என்பதே தற்போதுள்ள கேள்வி எனவும் அவர் குறிப்பிடுகின்றார். “உணவு இருக்கும் ஒருவர் எமக்கு உணவு வழங்குவார், ஆனால் ஒக்சிஜன் இல்லை என்றால் வாழ முடியாது” என அவர் கூறுகின்றார்.