தமிழகத்தில் காதல் கணவனை கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி, இரண்டாவது காதலன் உதவியுடன் அவரது சடலத்தை எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த ஆதனஞ்சேரி, திருமகள் நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவருக்கு விமலா ராணி என்ற மனைவியும், 14 வயதில் மகனும் உள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில், தங்கவேலுவின் செல்போனுக்கு அவரது சகோதரர் சக்திவேல் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவரது போனை எடுத்த விமலா ராணி தனது கணவரின் செல்போனை , தற்போது தனது மகன் ஆன்லைன் வகுப்பிற்கு பயன்படுத்தி கொண்டு இருப்பதாக கூறி போனை வைத்துள்ளார்.
அதன் பின் மீண்டும் கடந்த 1-ஆம் திகதி செல்போனை தொடர்பு கொண்ட போது, அந்த போனை எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து அடுத்த நாள் காலை போனை தொடர்பு கொண்ட போது, போன் ஸ்விட் ஆப்பில் இருந்ததால், சந்தேகமடைந்த சக்திவேல், உடனடியாக சகோதரரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு வீடு பூட்டிக் கிடப்பதைக் கண்டுள்ளார். இதையடுத்து, தங்கவேலின் தந்தை, சோமங்கலம் காவல் நிலையத்தில் தனது மகன் தங்கவேல், அவரது மனைவி விமலா ராணி, பேரன் ஹரிஷ் ராகவ் ஆகியோரை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் வழக்கு பதிவு செய்த பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த 10-ஆம் திகதி இரவு காணாமல் போன தங்கவேலின் மனைவி விமலாராணி அவரது மகன் ஹர்ஷாராகவ் உடன் காவல்நிலையத்தில் ஆஜர் ஆனார்.
கணவன் குறித்து கேட்ட போது, அவர் கொலை செய்யப்பட்டிருக்கும் விஷயம் தெரியவந்தது. பொலிசாரிடம் விமலா ராணி கொடுத்துள்ள வாக்குமூலத்தில், 10 வருடங்களுக்கு முன்பு தங்கவேலு, விமலராணியை காதலித்து திருமணம் செய்துள்ளர்.
சேலத்தில் வசித்த போது பக்கத்து வீட்டில் வசித்து வந்த ராஜா என்பவருடன் விமலா ராணிக்கு இரண்டாவது காதல் மலர்ந்துள்ளது. இது குறித்து தங்கவேலுவுக்கு தெரியவர, உடனே அவர் வேலையை வேறு ஊருக்கு மாற்றிக் கொண்டு சோமங்கலம் வந்துள்ளார்.
அதன் பின்னர் 7 வருடங்களாக ராஜாவுடன் செல்போனில் விமலா ராணி தன்னுடைய காதலை தொடர்ந்துள்ளார். இந்த தகவல் அறிந்து கணவன் கண்டித்தும் விமலா ராணி தனது காதலை கைவிடாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் 28-ஆம் திகதி தங்கவேலுடன் இந்த விவகாரம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டதால், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து அவரை கொலை செய்துவிட்டதாகவும், அதன் பின் அன்று இரவு 10 மணி வரை கணவரின் சடலத்தை வீட்டின் பெட்ரூமில் மறைத்து வைத்து அதன்பின் சேலத்தில் இருந்து ராஜாவை வரவழைத்து கணவரின் சடலத்தை அருகில் உள்ள ஏரியில் வீசி விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
விமலாராணி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த ஏரிக்கு சென்று பொலிசார் தேடிய போது, அவர் சடலம் கிடைக்கவில்லை. இதனால் பொலிசார் மீண்டும் விமலாராணியிடம் கிடுக்குப் பிடி விசாரணையை நடத்தியுள்ளனர்.
அதில் அவர் கொலை செய்த கணவனை எரித்துள்ளது தெரியவந்தது. கொலை செய்த பின் சடலம் யாருடையது என்பது தெரியக் கூடாது என்பதற்காக, சாக்குமூட்டையில் கட்டி சடலத்தின் மீது ராஜா தீ வைத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.