Loading...
இலங்கையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் சுகாதார தரப்பு அர்ப்பணிப்பான சேவையை வழங்கி வருகிறது.
இந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் 3 மருத்துவர்கள் உட்பட 16 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவசர சிகிச்சைப் பிரிவின் தலைமை மருத்துவ அதிகாரி பாலித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Loading...
3 மருத்துவர்கள், 6 தாதியர்கள் மற்றும் 7 ஊழியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, 12 வது நாளில் பல நோயாளிகளுக்கு நடத்தப்பட்ட ஆன்டிஜன் பரிசோதனைகளில் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
தற்போது 116 கொரோனா நோயாளிகள் பதுளை பொது வைத்தியசாலையில் ஐந்து விடுதிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், தினமும் ஏராளமான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Loading...