தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை மாற்றியமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று ஒரேநாளில் 1,964 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்த கொரோனா பாதிப்பு 25,81,094 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 28 பேர் பலியான நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 34,395 ஆக உயர்ந்துள்ளது. 1,917 பேர் பூரண நலன் பெற்றதை தொடர்ந்து, மொத்த பூரண நலன் பெற்றோரின் எண்ணிக்கை 25,26,317 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து உள்ளது.இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் பொதுமக்களுக்கான சிகிச்சை கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தீவிரம் இல்லாத, ஆக்சிஜன் இல்லாத படுக்கைக்கான ஒரு நாள் கட்டணம் ரூ.3000-ஆக நிர்ணயிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தீவிரம் இல்லாத, ஆக்சிஜன் உடன் கூடிய படுக்கைக்கான கட்டணம் ரூ.7000-ஆக நிர்ணயம். வெண்டிலேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சைக்கு ரூ.15,000 நிர்ணயிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.