ஒவ்வொரு தெய்வத்தையும் வழிபடும்போதும் பூஜை செய்யும் போதும் நாம் பயன்படுத்தும் மலர்கள் வித்தியாசப்படும்.
எந்த தெய்வங்களுக்கு என்னென்ன மலர்கள் உகந்தவை மற்றும் எந்த மலர்கள் பூஜையில் விலக்கப்பட வேண்டியவை ?
பூஜைக்கு உகந்த மலர்கள் :
விநாயகர் – அறுகு, சண்பகம், பாதிரி, சூரியகாந்தி, வன்னி,
சிவன் – கொன்றை, வில்வம், தும்பைபூ, சங்குபூ, செம்பருத்தி
விஷ்ணு – துளசி, மாதவி, குருந்து, வாகை, மத்யாணி, கருங்கால் கொன்றை, முருக்கு, அலரி, செம்பரத்தை, செந்திலகம், மருக்கொழுந்து
பிரமன் – அலரி
வைரவர் – செவ்வலரி
சூரியன் – தாமரை
முருகன் – வெட்சி, கடம்பு, முல்லை, குறிஞ்சி, மல்லிகை, காந்தள்
பார்வதி – நந்தியாவர்த்தனம் , நீலோற்பலம், தாமரை, சூரியகாந்தி, செம்பவளமல்லி
துர்க்கை – செவ்வெருக்கு சிவப்பு, அரலி, கொன்றைமலர்
இலக்குமி – நெய்தல், செந்தாமரை
சரஸ்வதி – வெண்தாமரை
அக்னி – வன்னி
சூரியன் – செந்தாமரை
சந்திரன் – வெள்ளரலி
செவ்வாய் – செண்பகம்
புதன் – வெண்காந்தள்
வியாழன் – முல்லை
வெள்ளி – வெண்தாமரை
சனி – கருங்குவளை
ராகு – மந்தாரை
கேது -செவ்வல்லி
பூஜையின் போது விலக்கப்பட வேண்டிய மலர்கள் :
விநாயகர் – துளசி
சிவன் – தாழம்பூ
விஷ்ணு – அட்சதை (எருக்கு, ஊமத்தம்பூ)
வைரவர் – நந்தியாவர்த்தனம் , மல்லிகை
சூரியன் – வில்வம்
பார்வதி – நெல்லி
துர்க்கை – அறுகு
இலக்குமி – தும்பைபூ
சரஸ்வதி – பவளம்