தென்சீனக் கடலில் அனைத்துலக அக்கறைகளை அமெரிக்கா தற்காக்கும் என்று வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.
அங்கு சர்ச்சைக்குரிய கடல்சார்ந்த வட்டாரத்தைப் பெய்ச்சிங் அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது தடுக்கப்படும் என்றும் அது கூறியது.
வெள்ளை மாளிகையின் புதிய பத்திரிக்கைச் செயலாளர் ஷான் ஸ்பைசர் அமெரிக்க ஊடகங்களுக்கு அளித்த விளக்கத்தில், சீனச் சந்தை ஊடுருவுப்படுவதை அமெரிக்கா விரும்புகிறது என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியதாகத் தெரிவித்தார்.
மேலும் அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதில் அமெரிக்கா அதிக அக்கறை கொண்டிருப்பதாக திரு. டிரம்ப் குறிப்பிட்டதாகவும் அவர் கூறினார்.
பசிஃபிக் பங்காளித்துவ வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக செயலாக்க ஆணையில் திரு. டிரம்ப் கையெழுத்திட்ட பிறகு திரு. ஸ்பைசர் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.
பசிஃபிக் பங்காளித்துவ வர்த்தக ஒப்பந்தம் குறித்து திரு. ஒபாமா நிர்வாகம் பேச்சு நடத்தியது. ஆனால் அதை உறுதிசெய்யவில்லை.
பசிஃபிக் பங்காளித்துவ வர்த்தக ஒப்பந்தத்தில் சீனா உள்ளடக்கப்படவில்லை.