இத்தனை நாட்களாக அமைதியாக நடந்து வந்த போராட்டம் இன்று வன்முறை போராட்டமாக சித்தரிக்கப்படுகிறது.
மாணவர்கள் யாரும் வன்முறையில் ஈடுபடவில்லை. ஒரு வேளை காவல்துறை நியமித்த ஆட்கள் கலவரத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என நம்பப்படுகிறது.
அமைதியான போராட்டத்தை உடனடியாக கலைக்க வேண்டிய அவசியம் காவல்துறைக்கு ஏன் வந்தது.
எல்லாமே திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. போராட்டக்காரர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட ஆதி திடீரென நேற்று ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை கூட்டி விலகுவதாக அறிவிக்கிறார்.
அவருக்கு விவேக் ஆதரவு தெரிவிக்கிறார். அவர் சொன்னதையே ஆர்.ஜே.பாலாஜியும், ராகவா லாரன்ஸ்சும் அப்படியே ஒப்பிக்கின்றனர்.
காவல்துறை குண்டுகட்டாக அமைதியாக போராடியவர்களை தூக்கிச் செல்கிறது. போராட்டம் உச்சத்தில் இருந்தபோது ஆதரவு தெரிவித்த, பிரபலங்கள் பலரும் இல்லை.
கூட்டத்தை பார்த்து சேர்ந்த கூட்டம் கலைந்தது. உண்மையாக போராடியவர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர்.
சிலர் பாதி மனதுடனேயே கலைந்து செல்கின்றனர். போராட்டத்தை உண்மையாக ஆதரித்த பல ஊடகவியலாளர்களை கடந்த 2 நாட்களாக பார்க்க முடியவில்லை.
ஆக போராட்டம் வெற்றியடைந்துவிட்டது முழுமைபெறாமல் ஒடுக்கப்பட்டு விட்டது என்பது தான் உண்மை.
ஜல்லிகட்டு நிரந்தர சட்டம், பீட்டா மீதான தடை என எதுவும் நடக்கவில்லை. போராட்டக்காரர்களால் கதாநாயகர்களாக பார்க்கப்பட்டவர்கள் தங்களை ஏமாற்றிவிட்டதாகவே மாணவர்களின் மனநிலை உள்ளது. இதற்கு அரசியல்வாதிகளே பரவாயில்லை என்கின்றனர் மாணவர்கள்.