Loading...
நடிகை குஷ்பூ 90 களில் பல வெற்றிப்படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக வலம் வந்தவர். நடிகை பத்மினிக்குப் பின்னர் முகபாவம் காட்டி நடிக்கக்கூடியவர் எனவும் பெயர் வாங்கியிருந்தார்.
இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி ஐ திருமணம் செய்து இரண்டு பெண் பிள்ளைகளுக்கு தாயாரான குஷ்பூ தமிழக அரசியலில் தற்போது கொங்கிரஸ் கட்சியில் உள்ளார்.
Loading...
தீவிர அரசியலில் இருந்தாலும் அவ்வப்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த அவர் மீண்டும் நடிக்க வருகிறார். ஆனாலும் அவர் நடிக்கப்போவது தமிழ் படத்தில் அல்ல. த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் தற்போது நடித்து வரும் தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார்.
குஷ்பூ தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளமை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று குறிப்பிட்டுள் ளார்.
Loading...