பார்ப்பதற்கு குலை நடுங்க வைக்கும் தோற்றம், கை அருகே நாலடி நீளம் உள்ள வாள். மாணவர்கள் போராட்டக் களத்தில் அமைதியாக அதே நேரம் உன்னிப்பாக கவனித்தபடி அமர்ந்தே இருந்தார்,இந்த மீனவப்பெண் என்கிறார்கள்.
மாணவர்கள் அன்பாக உணவும் தண்ணீரும் கொண்டு போய் கொடுத்தால் நீ சாப்பிடு கண்ணு தண்ணீர் மட்டும் கொடு என்று தண்ணீர் வாங்கி குடிப்பார்.
மீண்டும் இரவு நீண்ட நேரம் வரை அன்னியர்கள் யாரும் ஊடுருவி வருகிறார்களா என்பதை நோட்டம் விட்டபடி பார்வைகள் நாலா பக்கமும் சுழலும்.
சந்தேகப் படும்படியாக யார் வந்தாலும் நிறுத்தி யாருடா நீ என்பார். விவரம் சொன்னால் அனுப்புவார். இல்லை என்றால் பிள்ளைங்க போராடுதுங்க கெளம்பு என்று ஒரே வார்த்தை தான்.
எல்லாம் சரி நேற்று பதட்டமான சூழலில் இந்த வீரப் பெண் களத்தில் இல்லை. என்ன ஆனார் ?
யார் அப்புறப் படுத்தியது.?