Loading...
ஜீரண சக்தியை அதிகப்படுத்துவதற்கு வேறு எந்த மருந்தை தேடி அலைய வேண்டியதில்லை ஒன்றே அல்லது இரண்டோ நல்ல கனிந்த மஞ்சள் வாழைப் பழங்களை சாப்பிட்டால் போதும்.
தேவையான பொருட்கள் :
வாழைப்பழம் – 2
புளிக்காத தயிர் – 5 மேசைக்கரண்டி
தேன் – 3 மேசைக்கரண்டி
தேங்காய்ப் பூ – 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை :
Loading...
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாழைப்பழத்தை தோலை நீக்கி விட்டு வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைப்பழம, தேன், தயிர், தேங்காய் பூ, ஏலக்காய் தூள் போட்டு நன்றாக கலக்கவும்.
கடைசியாக கொத்தமல்லி தழை போட்டு பரிமாறவும்.
Loading...