அளவிற்கதிகமாக கையடக்க தொலைபேசியில் கேம் விளையாடிய மாணவன் ஒருவர், பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடந்த 23ஆம் திகதி மாத்தறை பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
15வயதான மாணவனின் இணைய வழி கல்விக்காக பெற்றோர் கையடக்க தொலைபேசி வாங்கிக் கொடுத்திருந்தனர். அதில் கேம் விளையாட ஆரம்பித்த மாணவன், நாளடைவில் அதற்கு அடிமையாகி விட்டார். நாள் முழுவதும் கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
அளவிற்கதிகமாக கேம் விளையாடிய அவர், இணைய வழி வகுப்புக்களில் பங்குபற்றுவதை தவிர்த்துக் கொண்டார். அந்த நேரத்திலும் கேம் விளையாடியுள்ளார்.
மாணவன் வகுப்பில் கலந்து கொள்ளாமல் விட்டதையடுத்து, ஆசிரியரால் அந்த விடயம் பெற்றோரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
மாணவன் கேம் விளையாடுவதிலேயே பொழுதை கழிப்பதை அறிந்த தாயார், கையடக்க தொலைபேசியை வாங்கி வைத்து விட்டார்.
கேம் விளையாட கையடக்க தொலைபேசி இல்லையென்ற விரக்தியில் மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.