புகைபிடிப்பவர்கள் கொவிட் தொற்று காரணமாக உயிரிழக்க வாய்ப்புள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புகைபிடித்தல் நுரையீரலின் செயல்பாட்டை பலவீனப்படுத்துகிறது என்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனை குழந்தை மருத்துவர் டொக்டர் தீபால் பெரேரா குறிப்பிட்டார்.
சிகரெட், சுருட்டு அல்லது வேறு எந்த சிகரெட்டையும் பயன்படுத்துபவர்களுக்கு நுரையீரல் செயல்பாடு பலவீனமாக இருப்பதாக மருத்துவர் சுட்டிக்காட்டினார்.
கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்கள் மிக விரைவாக கொவிட் நிமோனியா தொற்றுக்கு இலக்காகலாம் என மருத்துவர் தெரிவித்தார்.
“புகைப்பிடிப்பவர்களுக்கு அருகில் நெருக்கமாக இருக்கும் குழந்தைகளும் சிகரெட் புகையை அதே வழியில் சுவாசித்தாலும் குழந்தைகளுக்கு கடுமையான சிக்கல்களையும் மரணத்தையும் கூட உருவாக்கலாம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.