நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாகவே, சில்லறை விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சில்லறை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
சதொச மொத்த விற்பனை நிலையத்தில் 115 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட சிவப்பு சீனியின் விலை, தற்போது 120 ரூபா வரை அதிகரித்துள்ளதுடன், ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பு விலை 250 ரூபா வரை அதிகரித்துள்ளது.
இதன்படி புதிய விலை விபரங்கள்
சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 250 ரூபா
சீனி ஒரு கிலோகிராம் 215 ரூபா
உருளை கிழங்கு (இலங்கை) ஒரு கிலோகிராம் 300 ரூபா
உருளை கிழங்கு (இந்தியா) ஒரு கிலோகிராம் 240 ரூபா
பெரிய வெங்காயம் (வெளிநாடு) ஒரு கிலோகிராம் 135ரூபா
சிவப்பு பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 400 ரூபா