தமிழ் சினிமாவில் நடிகராகவும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவும் இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். மகன் இன்பநிதியுடன் இருக்கும் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
இதனையடுத்து, வியப்பூட்டும் செய்தியாக இந்திய ஐ லீக் கால்பந்து தொடரில் தடம்பதிக்கவிருக்கிறார் இன்பன் உதயநிதி. சென்னையிலுள்ள மேக்ஸ் கால்பந்து அகாடமியில் இன்பன் பயிற்சி பெற்று வருகிறார்.
இவர் டிபெண்டர் ரோலில் பயிற்சி செய்கிறார். தற்போது இவரை அகாடமியிலிருந்து நேரடியாக ஒரு அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியளவில் பிரபலமான ஐ லீக் தொடர் 2007ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
இதில் 21 கிளப் பணிகள் கலந்துகொள்கின்றன. இந்தாண்டுக்கான தொடர் ஆரம்பமாகவிருப்பதால் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்யும் பணிகளில் கிளப் அணிகள் நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன.
நெரோகா எஃப்சி (North East Reorganising Cultural Association (Neroca) என்ற கால்பந்து அணி இன்பன் உதயநிதியை ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை தன்னுடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் நெரோகா அணி பதிவிட்டுள்ளது. இந்த கிளப்பின் தலைமையிடம் மணிப்பூர் மாநிலத்தில் குறிப்பிடத்தக்கது.
A post shared by Neroca FC (@nerocafc)