அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் மேலும் 1.50 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.93 கோடியைக் கடந்துள்ளது.
ஒரே நாளில் 1100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 லட்சத்து 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.07 கோடியைத் தாண்டியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.