பொதுவாக உடல் பருமன் அதிகமாக இருக்கும் சிலருக்கு தொப்பை அதிகமாக காணப்படும். அந்த தொப்பையை குறைப்பதற்காக பலரும் பல்வேறு முயற்சிகளை எடுத்தும் அது எந்த விதமான பலனும் இன்றி கவலையில் இருப்பார்கள்.
உங்களின் தொப்பயை 10 நாட்களிலேயே குறைத்து, ஸ்லிம்மான உடலமைப்பை பெறுவதற்கு தினமும் அன்னாசி பழத்தை சாப்பிடுங்க!
அன்னாசி பழத்தின் நன்மைகள்
அன்னாசி பழத்தில் பொட்டாசியம், கால்சியம் மாங்கனீஸ் மற்றும் மினரல் போன்ற உடலுக்கு ஆரோக்கியமான முக்கிய சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.
அன்னாசி பழத்தில் உள்ள மினரல் சத்துக்கள் நம் உடலில் ஏற்படும் வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கிறது.
அன்னாசியில் கொழுப்புச் சத்துகள் குறைவாகவும், நார்ச்சத்துகள் அதிகமாகவும் இருப்பதால், இவை பித்தக் கோளாறுகள், ஜீரணக் கோளாறுகள் உடலில் ஏற்படும் வீக்கம், தொப்பை குறைத்தல் போன்ற பிரச்சனைகளை அன்னாசி பழமானது தீர்த்து வைக்கிறது.
தொப்பை குறைக்கும் முறை
அன்னாசி பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி, அதனுடன் நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து, அன்னாசி பழம் மற்றும் ஓமப் பொடியை ஒன்றாகச் சேர்த்து கலந்து, அதில் ஒரு கிளாஸ் தண்ணிர் ஊற்றிக் கொதிக்க வைக்க வேண்டும்.
பின் அதனை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை வடிகட்டி அதனுடைய சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இந்த முறையை தினமும் காலையில் பத்து நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் தொப்பை விரைவில் குறைந்துக் காணப்படும்.
மிளகு ரசம் செய்யும் போது அதில் அன்னாசி துண்டுகளை சேர்த்து செய்ய வேண்டும்.
பின் தினமும் இந்த அன்னாசி ரசத்தினை ஒரு கிளாஸ் அருந்தி வந்தால், உங்களில் உடல் எடை ஒரே வாரத்தில் மூன்று கிலோ வரை குறைந்து விடுகிறது.