உடல் எடையை ஏற்றிக்கொண்டும், குறைத்துக்கொண்டும் இருந்தால் அவர்களது முன்னழகு பாதிக்கப்படும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதாவது, மார்பக தசைகளில் சுருக்கம் விழுந்து விடும் என்கிறார்கள் அவர்கள்.
சில பெண்கள் சராசரி உடல் எடையைவிட அதிக எடையில் இருப்பார்கள். திடீரென்று யாரோ சொன்ன ஆலோசனையின் பேரில் `டயட்’டில் இருந்து உடம்பை குறைத்துக் கொள்வார்கள். அப்படி இருக்கும்போது, அவர்கள் எடுத்துக்கொள்ளும் சத்தான உணவு அல்லது மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காரணமாக அவர்களது உடல் மீண்டும் ஏறிவிடும்.
இப்படி உடல் எடையை ஏற்றிக்கொண்டும், குறைத்துக்கொண்டும் இருந்தால் அவர்களது முன்னழகு பாதிக்கப்படும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதாவது, மார்பக தசைகளில் சுருக்கம் விழுந்து விடும் என்கிறார்கள் அவர்கள்.
இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம்?
- மார்பக அழகுக்கு முக்கிய தேவை புரோட்டீன். இந்த புரோட்டீனில்தான் மார்பகம் சரியான `ஷேப்’பிலும், எடுப்பான தோற்றத்திலும் காட்சியளிக்கத் தேவையான கொலாஜன் இருக்கிறது. அதனால், புரோட்டின் அதிகம் உள்ள உணவு வகைகளை தினமும் சாப்பாட்டில் எடுத்துக்கொள்ளுங்கள்.
- உங்களுக்கு ஒத்துக்கொள்ளும் என்றால் மார்பகங்களை ஐஸ் வாட்டர் கொண்டு ஒற்றியெடுக்கலாம்.
- முடிந்தவரை வெந்நீரில் குளிப்பதை பெண்கள் தவிர்த்துவிட வேண்டும். தொடர்ந்து வெந்நீரில் குளித்து வந்தால் மார்பகத் தசைகள் தொய்வடைந்து விடும். இதை ஆய்வு செய்தும் நிரூபித்து இருக்கிறார்கள். அதேநேரம், உடல்நிலை சரியில்லாத நேரத்தில் வெந்நீரில் குளிக்கும்போது மார்பகத்தில் வெந்நீர் படாமல் குளிக்கலாம்.